திருநிலை பெரியாண்டவர் ஆலயம்
பெரியாண்டவர் ஆலையத்தில் நடைபெறும் விழாக்கள்
- ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் மாலை 5 மணி முதல் சிறப்பு வழிபாடுகளும் அர்ச்சனை, ஆராதனை நடைபெற்று வருகின்றன. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகின்றது.
- மகா சிவராத்திரியை முன்னிட்டு மாலை 4 மணிமுதல் தேவார இசையுடன் தொடங்கி இரவு 6 மணி அளவில் பெரியாண்டவர் அங்காளபரமேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் தோன்றி ஆலய வீதிவுலா வந்து அருளுதல் மற்றும் நான்கு கால சிறப்பு பூசை இரவு முழுவதும் நடைபெறும். மேலும் சிவபுராணம் நாடகம் நடைபெறும். இரவு சிறப்பு அன்னதானம் நடைபெறும்.
- கார்த்திகை மாத தீபம் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.
- ஜப்பசி மாத பௌர்ணமி அன்று அன்னாபிஷேகம் சிறப்பான முறையில் நடைபெறும். அன்று இரவு சிறப்பு அன்னதானம் நடைபெறும்.
- ஜனவரி முதல் தேதி மற்றும், தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாள் சிறப்பு நிகழ்ச்சிகள், சிறப்பு வழிபாடுகளும் அர்ச்சனை, ஆராதனை ஆகியவையும் நடைபெற்று வருகின்றன. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகின்றது.
- செப்டம்பர் 12 அன்று ஒவ்வொரு வருடமும் மாலை 4 மணிமுதல் தேவார இசையுடன் தொடங்கி இரவு 6 மணி அளவில் பெரியாண்டவர் அங்காளபரமேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் தோன்றி இறை அன்பர்களுடன் அருகில் உள்ள விநாயகர் ஆலயத்தில் இருந்து பால் குடம் எடுத்தல் தொடங்கி சுயம்பு லிங்கமான பெரியண்டவருக்கு வருகின்ற அத்தனை இறை அன்பர்களும் தம் கைகளால் பால் அபிஷகம் செய்யும் விழா நடைபெறும். அன்று இரவு சிறப்பு நிகழ்ச்சிகள், சிறப்பு வழிபாடுகளும்,அர்ச்சனை, ஆராதனை நடைபெற்று வருகின்றன. பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும் வழங்கப்படுகின்றது.
- பெரியான்டவரை குலதெய்வமாக கொண்ட ஆயிரமாயிரம் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பெரியாண்டவருக்கு உகந்த நாட்களான ஞாயிறு, திங்கள், செவ்வாய் போன்ற நாட்களில் பொங்கல் வைத்து படைப்பது, 21 இருபத்தி ஓர் மண் உருண்டையில் பிள்ளையார் செய்வித்து சிறப்பு அபிஷேகம் செய்வித்தல் நடைபெறுகின்றன.
- அப்பொழுது மொட்டை அடித்தல் காது குத்துதல் போன்ற விழாக்கள் வார முழுவதும் நடைபெறுகின்றன.
- குழந்தை வரம் வேண்டி பலன் பெற்ற பல குடும்பங்கள் துலாபாரம் வழங்கும் நிகச்சி நடைபெறுகின்றது.
ஆலயம் திறக்கும் நேரம்
ஒவ்வொரு நாளும் காலை 6.00 மணிக்கு திறந்து மாலை இரவு 8.00 மணி அளவில் நடை சாத்தப்படும். இடையில் நடை சாத்தபடுவதில்லை/
தொடர்புக்கு G .ஏகசீலன் 9842740957