தலத்தின் மகிமை...
- சிவன், சக்தி ஆகிய இருவரின் அருளும் ஒருங்கே அமையப் பெற்ற திருத்தலம்.
- பெரியாண்டவர் ஆலய புராண வரலாற்றின்படி சக்தியின் சாபத்தால் சித்தம் கலங்கி பித்தம் பிடித்த நிலையில் ஈசன் உலகை வலம் வந்து திருநிலையில் ஓருநிலையாய் நின்ற இடம்.
- தாயின் கருவின்றி பெரிய மனிதராக பிறவியெடுத்து ஈசனே உலகை வலம் வந்தபோது பார்வதியால் பெரியாண்டவர் என்று வணங்கப்பட்ட திருத்தலம்.
- சிவபெருமானின் பாதம் பட்ட தலம்.
- குழந்தைப் பேறு அருளும் பரிகாரத் தலம்.
- கலியுகத்தில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஈசன் ஜோதி ரூபமாக காட்சி அளித்து நின்ற தலம்.
- ஜோதியாக காட்சி தந்த வெட்ட வெளி இடத்தில் சுயம்புலிங்கம் பிரதிஷ்டை செய்து வணங்கி வழிபடும் தலம்.
- லிங்கத்தின் வலதுபுறம் சிவசக்தி இருவரும் ஒருங்கே அமர்ந்து தெய்வீகக் காட்சி தருகின்ற தலம்.
- பார்வதி தேவி திருநிலைநாயகி என அழைக்கப்படும் தலம்.
- சக்தியின் சூலாயுதம் திருநிலையில் வீழ்ந்த போது 21 மண் உருண்டைகள் சிதறி வீழ்ந்து அவை சிவகணங்களாக மாறிய தலம்.
- சுயம்பு லிங்கத்தைச் சுற்றி சிவகணங்கள் மண் உருக்கொண்டு இறைவனை பூஜிக்கும் தலம்.
- குளம் மற்றும் ஏரி ஆகிய இரு கரைகளுக்கு மத்தியில் இயற்கை சூழலில் அமைந்துள்ள ஆலயம்.
தலத்தின் இருப்பிடம்
காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு வட்டத்தில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலமான திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ஆலயத்திலிருந்து சுமார் 8 கி.மி. தொலைவில் திருநிலை கிராமம் உள்ளது. செங்கல்பட்டிலிருந்து கிழக்கே 14 கி.மி தொலைவிலும், திருப்போரூரிலிருந்து மேற்கே 12 கி.மி. தொலைவிலும் இத்தலம் உள்ளது. திருக்கழுக்குன்றத்தில் இருந்து திருநிலைக்கு பேருந்து தடம் எண் T11, T75 மற்றும் சரஸ்வதி மினி பஸ் வசதி உள்ளது.